தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கும் விக்ரம்

cad3bdbb-61d5-45f9-b217-217379d5b626_S_secvpfவிக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘ஐ’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். விக்ரமின் ரசிகர்களுக்கு அவரின் பிறந்தநாள் பரிசாக இந்த போஸ்டரை வெளியிடுவதாகவும் கூறியுள்ளனர்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். மேலும், பசுபதி, ஜாக்கி ஷெராப், அபிமன்யூ சிங், மனோபாலா, சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர், நடிகை சார்மி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

பயணம் மற்றும் திரில்லரை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் லாரி டிரைவராக வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நேபாலில் படமாக்கிவிட்டு தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளனர்.

தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்த வருடத்தின் நடுவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries