சமூக வலைத்தளங்களை ஆட்கொண்ட த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்

57d51d41-2738-4a64-bb23-c03c68145017_S_secvpfஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார் முன்னிலையில் நேற்று மாலை வெளியிட்டனர்.

இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘எனது முதல் கதையை தாணுக்கு சொன்னேன். இன்று எனது முதல் படத்தின் டீசரையும் அவரே வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சிக்கு கூடுதலாய் சரத்குமார் எங்களை வாழ்த்தினார்.

தாணு போல் பாராட்டுவதற்கு ஆளே இல்லை. இவ்வகையில் ஒரு டீசர் வெளியிடுவது இதுவே முதல் முறை என அவர்கள் கூறக்கேட்டதும் பெருமகிழ்ச்சியாய் இருந்தது. இந்த டீசரில் ‘விர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி’ என்ற வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த டீசர் படத்திற்கான நல்ல ஒரு தளமாக அமைந்துள்ளது’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries