மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் திரிஷா

27d9908d-a731-4d9a-9f29-66e766b91aa9_S_secvpf‘மௌனம் பேசிதே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருபவர் திரிஷா. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதன்பின் பட வாய்ப்புகள் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து ‘அப்பாடக்கர்’ படத்திலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் பிசியாக நடித்து வரும் திரிஷாவிற்கு, கமலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே திரிஷா கமலுடன் இணைந்து ‘மன்மத அம்பு’ படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் பாபநாசம், உத்தமவில்லன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் கமல் நடிக்கவுள்ளார்.

இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ள புதிய படத்தை கமலின் உதவியாளர் இயக்கவுள்ளார். கமலே தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தை ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஸ்டைலிஷாக எடுக்க இருக்கிறார்களாம். இதில் திரிஷா ஸ்டைலிஷ் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries