அடுத்த மாதம் சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, ஜோதிகா படங்கள் ரிலீஸ்

cbe16d56-a18a-4dea-aaf2-9f1154d91e70_S_secvpfசூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, ஜோதிகா படங்கள் அடுத்த மாதம் (மே) ரிலீசாக உள்ளன. பெரிய நடிகர்கள் படங்கள் வருவதையொட்டி ரசிகர்களுக்கு அடுத்த மாதம் கொண்டாட்டமாக இருக்கும் என்கின்றனர்.

சூர்யாவின் ‘மாஸ்’ படம் மே 15–ந் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த உள்ளனர். இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரணிதா, ஜெயராம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

இதே நாளில் ஆர்யாவின் ‘புறம்போக்கு’, ஜெயம்ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ படங்களை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார்.

ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகா நாயகியாக வருகிறார்.

ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ படமும் பலத்த எதிர்பார்ப்புடன் மே 15–ந் தேதி வருகிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். இது தணிக்கை குவுக்கு அனுப்பப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கமலின் உத்தமவில்லன் படம் மே 1–ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries