விழித்திரு படத்திற்காக இரவு முழுவதும் விழித்திருக்கும் தன்ஷிகா

4b24bbcc-2018-4459-9897-9d3c21bb7f3a_S_secvpf‘அரவான்’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த தன்ஷிகா தற்போது ‘விழித்திரு’ படத்தில் நடித்து வருகிறார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பேபி சாரா நடித்துள்ளார்.

ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்றாக இணைவதும்தான் இப்படத்தின் கதை. இப்படம் முழுவதும் இரவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிய உள்ளது.

கடைசி நாளான இன்று படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல் இரவு முழுவதும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ள தன்ஷிகா, படப்பிடிப்புக்காக இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கப் போவதாக கூறியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்த கையோடு, இறுதிக்கட்ட பணிகளையும் முடித்து படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online