அசோக் செல்வனுடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்

9dc79739-b4e1-4ce8-92e8-7b997cbe2f36_S_secvpf‘சூது கவ்வும்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அசோக் செல்வன் ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வில்லா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ‘தெகிடி’ படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசோக் செல்வனுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் ‘சவாலே சமாளி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் சிவாவுடன் இணைந்து ‘144’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார். முன்னணி நடிகையான பிரியா ஆனந்த் தொடர்ந்து வளர்ந்து வரும் நாயகர்களிடம் ஜோடி போட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ‘எதிர் நீச்சல்’, விமலுடன் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’, சிவாவுடன் ‘வணக்கம் சென்னை’, தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவரவுள்ள ‘வை ராஜா வை’ படத்திலும் நடித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வனுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா ஆனந்த்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online