சிம்புவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?

bbfbe0b9-ad6b-4ef4-94f4-d380bbcbfe71_S_secvpfசிம்பு நடிப்பில் கடந்து மூன்று வருடங்களாக எந்தப்படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இதைத்தவிர தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கவிருக்கும் புதுபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது தவிர ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொம்பன்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவை வைத்து கிருத்திகா இயக்கவிருக்கும் படம் அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கிருத்திகா இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்திருந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online