கதாநாயகர்கள் பெண் இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும்: ஐஸ்வர்யா தனுஷ்

d5cd8fde-0524-4634-b750-e8ff6de4aab1_S_secvpfஐஸ்வர்யா ஏற்கனவே தனுசை வைத்து ‘3’ என்ற படத்தை டைரக்டு செய்தார். தற்போது ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கவுதம் கார்த்திக், ப்ரியாஆனந்த் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்து உள்ளார். மே 1–ந்தேதி ரிலீசாகிறது.

‘வை ராஜா வை’ படம் குறித்த ஐஸ்வர்யா அளித்த பேட்டி வருமாறு:–

நான் இயக்கிய ‘3’ படம் காதல் கதையம்சமாக இருந்தது. ‘வை ராஜா வை’ கமர்சியல் படமாக தயாராகியுள்ளது. திரில்லரும் இருக்கும். சைக்கலாஜிக்கல் சம்பந்தப்பட்ட கதைகளில் எனக்கு ஆர்வம் உண்டு. இந்த படத்திலும் அந்த விஷயம் இருக்கும்.

குரூஸ் கப்பலில் இதன் ஒரு பகுதி படப்பிடிப்பை நடத்தினோம். அது சவாலாக இருந்தது. ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் என் மேல் நம்பிக்கை வைத்து கதைக்கு தேவையான செலவை தாராளமாக செய்தார்கள். தமிழ் சினிமாவில் இந்த கதை வித்தியாசமானது. யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.

நான் விவேக் ரசிகை. அவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு பாடலுக்கு ஆடுகிறார். டைரக்டர் வசந்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தனுஷ் எனக்கு உதவியாக இருக்கிறார். அவர் சப்போர்ட் இல்லாமல் இந்த படத்தை நான் இயக்கி இருக்க முடியாது. உற்சாகம் அளித்து இயக்க வைத்தார். என் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறார். என் தந்தையின் ஆசியும் இருக்கிறது. இருவரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள்.

பெண் இயக்குனர்கள் படங்களில் இந்தி நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுபோல் இங்குள்ள கதாநாயகர்களும் பாகுபாடு பார்க்காமல் பெண் இயக்குனர்கள் படங்களில் நடிக்க முன் வர வேண்டும். அவர்களை ஒதுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விவேக் பேசும்போது, ‘‘ஐஸ்வர்யாவுக்கு இந்த படம் சிறந்த கமர்சியல் டைரக்டர் அந்தஸ்தை பெற்று தரும்’’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries