ரஜினி, அஜித்துக்கு பிறகு நான்தான்: பவர் ஸ்டார் சீனிவாசன்

fff4c3f1-8739-48ea-93d8-749c51b991db_S_secvpfதமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பட்டியலில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர். ஆரம்பத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அதற்காகவே அந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

அதுமட்டுமில்லாமல், இவர் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அந்த இடத்திலும் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இப்படியாக, புகழோடு வலம் வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது பல பேட்டிகளிலும், எனக்கு போட்டி சூப்பர் ஸ்டார்தான். ஐஸ்வர்யா ராயோடு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று கூறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் நடந்தவற்றை வைத்து பவர் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, யார் அவார்டு வாங்குராங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்ன விசில் சத்தம் கேக்குதுங்கறதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, ரஜினி, அஜித் ஆகியோருக்கு பிறகு இவரது பெயரையும் கூறியுள்ளார்.

இதிலிருந்து, அவர் என்ன சொல்ல வருகிறாரென்றால், ரஜினி, அஜித்துக்கு பிறகு இவருடைய பெயருக்குத்தான் ரசிகர்கள் அதிக விசில் சத்தம் கொடுக்கின்றனர் என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries