சவுகார்பேட்டையில் பேயாக வலம் வரும் ராய் லட்சுமி

68225eb6-ad9d-4b78-9aad-2eb6def3fb06_S_secvpfஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இவர்களுடன் விவேக், சரவணன், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா, பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலம் நடித்து வருகின்றனர். ஜான் பீட்டர் இசையமைத்து வருகிறார்.

இதில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு வேடத்தில் மந்திரவாதியாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமி முதன்முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு பேய் பிடித்து ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாபாத்திரமாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தை ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவை சீனிவாச ரெட்டி கவனித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online