அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்:

44361e82-2778-4f99-9662-236eb728b356_S_secvpfஇந்தியர்கள் உலக சினிமாக்களை அன்னாந்து பார்த்த காலம் மாறி, உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றுள்ளது மராத்திய திரைப்படமான ‘கோர்ட்’.

சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்குரைஞர் போராடுகிறார்.

இது நாயகன் இது வில்லன் என்பது போன்ற ஒற்றைத்தன்மையான காட்சி சித்தரிப்புகள் படத்தில் கிடையாது. சொல்லப்போனால் படத்திற்கு ஹீரோவே கிடையாது. காம்ப்ளே வழக்கைச் சுற்றியே படம் நகர்கிறது. படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான்.

கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கோர்ட்’ மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 17 விருதுகளைப் பெற்றுள்ளது. தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது கோர்ட்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries