விஜய் ஆண்டனியுடன் சண்டை போட்ட சுஷ்மா ராஜ்

6dae52e3-2ae1-4e91-a255-5e608a24c832_S_secvpfவிஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் என்.ஆனந் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். மேலும், பசுபதி, மனோபாலா, ஜகன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தெலுங்கில் ‘மாயா’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் பட அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது,

“இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன்.

அப்படங்களை பார்த்து இந்த வாய்ப்பினை எனக்கு அளித்தார் இயக்குனர் ஆனந். இந்த படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனியும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே முடித்தேன்.

தமிழ் எனக்கு அதிக பரிச்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஒரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாக இருந்தது. ‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன்.

அனைவரும் அப்பாடல் காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருப்பதாக சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.

நாய்கள் என்றாலே எனக்கு பயம். படத்தில் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சியை படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடித்ததில் நான் கீழே விழுந்துவிட்டேன். இப்படத்தில் நடித்ததை மறக்க முடியாத அளவிற்கு இந்த சம்பவம் அமைந்தது.

இப்படத்தில் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் நடித்ததையும் மறக்கவே முடியாது. அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன்.

விஜய் ஆண்டனி மிகவும் நல்ல மனிதர். யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries