உத்தம வில்லன் திரைப்படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

9596dba9-3307-49b4-b57b-7ae2126832fdOtherImageஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள பல திரையரங்கங்களின் வாசலில் இன்று காலை முதல் ஏராளமான கமல் ரசிகர்கள் ஆவலுடன் படம் பார்க்க காத்திருந்தனர்.

இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் இடையிலான பிரச்சனை தொடர்பாக படம் ரிலீசாவது தள்ளிப்போனதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதன் விளைவாக இன்று மாலை 6 மணியளவில் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries