மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு?

c13b0351-a6d3-401b-858f-e19ae90d0885_S_secvpfசிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. இப்படத்திற்கு பிறகு ‘வாலு’ படத்தில் நடிக்க தொடங்கினார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் ஆரம்பத்திலேயே ஹன்சிகாவும் சிம்புவும் காதல் வயப்பட்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனால் இப்படம் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்க தொடங்கியது. சிம்புவும் ஹன்சிகாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் படக்குழுவினர் ஹன்சிகாவை சமரசம் செய்து நடிக்க வைத்தனர். நீண்ட கால படப்பிடிப்பில் இருந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்தது.

அதன்பின் படத்திற்கான பின்னணி வேலைகளும் மெத்தனமாகவே தொடங்கியது. ஒரு வழியாக படத்தை கடந்த வருடம் முடித்தார்கள். பின்னர் படம் இப்போ ரிலீசாகும் அப்போ ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

கடைசியாக மே 9ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் இந்த தேதியிலும் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அனேகமாக இப்படம் ஜூலையில் தான் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries