கோவை சரளாவை விடாத ராகவா லாரன்ஸ்

0d38a272-fff1-4314-af8f-1e0684be29fb_S_secvpfராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய மூன்று படங்களிலும் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூன்று படங்களிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. குறிப்பாக, குழந்தைகள் இவரது காமெடியை மிகவும் ரசித்தனர்.

தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு கோவை சரளாவை பயன்படுத்தியதற்கான காரணத்தை லாரன்ஸ் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கோவை சரளா ‘சதிலீலாவதி’ படத்தில் கோவை தமிழில் பேசி நடித்திருப்பார். அந்த படத்திலிருந்து அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதன்பிறகு கோவை சரளா நிறைய படங்களில் கோவை தமிழ் பேசி நடிக்கவில்லை.

ஆகவே, நான் இயக்கும் படத்தில் அவருக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு வழங்கி, அவரை கோவை தமிழ் பேசி நடிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதனாலேயே, எனது மூன்று படங்களிலும் அவரை நடிக்க வைத்தேன். இந்த முனி, இனி எத்தனை பாகம் சென்றாலும், அவர் அதில் தொடர்ந்து நடிப்பார் என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries