டீச்சராக மாறிய நயன்தாரா

5118845d-1ac1-4306-b35f-2cb7d74eef91_S_secvpfநயன்தாராவும், ஜீவாவும் ஏற்கெனவே ‘ஈ’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, இவர்கள் திருநாள் என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா டீச்சராக வருகிறாராம். அதுவும் ஃப்ரி கேஜி வகுப்புக்கான டீச்சராக வருகிறாராம். மேலும், ஜீவா இதில் கிராமத்து ரவுடியாக நடிக்கிறாராம்.

இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுக்கு ஹோம்லி வேடம். இவர் ஃப்ரி கேஜி டீச்சராக வருகிறார். இந்த கதாபாத்திரம் கோலிவுட் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஜீவா கிராமத்து ரவுடி வேடத்தில் வருகிறார். ஜீவாவுக்கு முந்தைய படங்களைவிட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பை கும்பகோணத்தில் இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறோம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online