சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா?

ab0f68fb-c955-470d-b565-7eb493bccffe_S_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்திற்கு பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் புதுமுக நடிகை கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? இவருக்கு யார் ஜோடியாகப் போகிறார்? என்று சஸ்பென்சுடன் இருந்து வருகிறது. தற்போது, இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் நுழைந்தபோது ஓவியா, ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா என வளர்ந்துவரும் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். பின்னர், தன்னையும் முன்னணி ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார்.

பிறகு, ‘காக்கிச்சட்டை’ படத்தில் முதலில் நயன்தாராவைத்தான் இவருக்கு ஜோடியாக்க எண்ணினர். ஆனால், நயன்தாரா, இவருக்கு அக்கா மாதிரி இருப்பார் என்பதால் ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த வாய்ப்பு போனது.

தற்போது தனது முன்னணி ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த சிவகார்த்திகேயன், இவர் நடிக்கும் புதிய படத்தில் முன்னணி நடிகையான சமந்தாவை ஜோடியாக்க வேண்டும் என்று படக்குழுவினரிடம் கண்டிப்பாக கூறிவிட்டாரம். இவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிப்பதாக பேச்சு அடிபடுகிறது. சமந்தா தற்போது சூர்யாவுடன் ‘24’, தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online