பாபி சிம்ஹாவுக்கு உத்வேகம் கொடுத்த வசனம்

d2462e7f-8249-458f-bdeb-1629b9f2441d_S_secvpfபாபி சிம்ஹா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் இவர் நடித்திருந்த ‘அசால்ட் சேது’ கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக 2014-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வில்லனுக்குண்டான தேசிய விருதுக்கு பாபி சிம்ஹா தேர்வானார்.

இதையடுத்து, நேற்று இந்த தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதுக்கு தேர்வானவர்களுக்கு தனது கையால் தேசிய விருதுகளை வழங்கினார். பாபி சிம்ஹாவும் ஜனாதிபதியின் கையால் சிறந்த வில்லனுக்குண்டான தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் பாபி சிம்ஹா கூறும்போது, என் மேல் நம்பிக்கை வைத்து அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நாம வாழணும், செமையா வாழணும்’ இந்த வசனம்தான் என்னை படம் முழுக்க முழு உத்வேகத்துடன் நடிக்க உதவியது.

என்னுடைய தயாரிப்பாளர்கள், மற்றும் என்னுடன் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றிகள் என்று தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries