எனக்கும் கோபம் வரும்: நான் சாதாரண பெண்தான்-நயன்தாரா

d1c23bf5-98c3-4878-a5c9-df54d9fe5928_S_secvpfதமிழ், தெலுங்கு, பட உலகில் நயன்தாரா நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தும் துவண்டு விடாமல் மீண்டும் புது வாழ்க்கையை நம்பிக்கையோடு துவங்கி உள்ளார்.

நயன்தாராவின் காதல் முதல் சிம்புவுடன் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் திடீரென தகராறு மூண்டு பிரிந்தார்கள்.

அப்போது ஒருவர் மீது ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார்கள். சில நாட்கள் அமைதியாக இருந்த நயன்தாரா வாழ்க்கையில் பிரபுதேவாவும் புகுந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர்.

நயன்தாராவை மணந்து கொள்ள முதல் மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். இது போல் நயன்தாராவும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

திருமணத்துக்கு பின் வெளிநாட்டில் குடியேறவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. பிரிவுக்கான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவரிடம் கடந்த கால காதல் மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு நயன்தாரா பதில் கூறும் போது நானும் சாதாரணமான பெண்தான் எனக்கும் ஆசைகள் இருக்கிறது. கோபமும் வரும். மற்றவர்களைபோல் சந்தோஷப்படவும் செய்வேன். சராசரி மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உணர்ச்சிகளும் எனக்கும் இருக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online