ரஜினியை இயக்கும் ரஞ்சித்

54c9089f-b198-4276-9e04-2ddb6eb1c13e_S_secvpf‘லிங்கா’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற செய்திதான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இப்படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாகவும் செய்தி வந்தது.

இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘காஞ்சனா-2’ ஆம் பாகத்தின் வெற்றியை பார்த்து வியந்துபோன ரஜினி, அவரை நேரில் அழைத்து வாழ்த்துக்கூறியதோடு மட்டுமல்லாமல், ராகவா லாரன்சின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.

தாணு தயாரிக்கவிருக்கிறாராம். ரஜினியை வைத்து படம் தயாரிக்கவேண்டும் என்ற கலைப்புலி எஸ்.தாணுவின் ஆசை இப்படம் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில்தான் நடிக்கப்போகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries