பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ராணாவை சைக்கோ என்று சொல்லிய திரிஷா

thirisha1திரிஷா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களும் டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரிஷா தனது நன்றியையும் தெரிவித்து வருகிறார்.

அந்த வரிசையில், நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, மாதவன், வைபவ் ஆகியோரும் நடிகைகளில் ஹன்சிகா, சமந்தா, குஷ்பு, ராதிகா சரத்குமார், தன்ஷிகா, ஸ்ரேயா ரெட்டி, பிரியா மணி, நிகிஷா பட்டேல், கார்த்திகா நாயர், ஆகியோரும் இயக்குனர்கள் செல்வராகவன், கீதா செல்வராகவன், திரு, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அனைவருக்கும் திரிஷா தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவரது முன்னாள் காதலரான ராணா டகுபதியும் திரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு திரிஷா நன்றி சைக்கோ என்று குறிப்பிட்டுள்ளார்.

சைக்கோ என்பது ராணாவுக்கு திரிஷா வைத்த செல்லப் பெயரா? அல்லது சமீபத்தில் வருண்மணியன்-திரிஷா பிரிவுக்கு ராணாதான் காரணம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

அதை மனதில் வைத்து திரிஷா அப்படி கூறினாரா? என்று தெரியவில்லை. மேலும், வருண்மணியன் திரிஷாவுக்கு இதுவரை பிறந்தநாள் வாழ்த்துக் கூறாதது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online