மீண்டும் வடசென்னை பக்கம் சென்ற கார்த்தி

507084ea-8c9e-47a0-905b-0ca117fc9171_S_secvpfகார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெட்ராஸ்’. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவானது. அதற்கேற்ப வடசென்னையை சுற்றியே படமாக்கியிருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.

தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படம் ‘காஸ்மோரா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்கள். கார்த்திக்கு அப்பாவாக விவேக் நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில் பிரம்மாண்டமான செட் அமைத்து இன்று படப்பிடிப்பை தொடங்கினர். கார்த்தி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளனர். விரைவில் இந்த படக்குழுவுடன் நயன்தாரா இணையவுள்ளார்.

‘மெட்ராஸ்’ படம் போல் இப்படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries