மேரி கோம் என் இதயத்தின் ஒரு பகுதி: பிரியங்கா சோப்ரா

9fcc2de9-883a-4baa-841b-ab47f8c2a655_S_secvpfபிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘மேரி கோம்’ என்ற படம் கடந்த வருடம் வெளியானது.

இதில் மேரி கோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். குத்துச்சண்டை வீராங்கனையாகவும் எதற்கும் பயப்படாத துணிச்சலான பெண்ணாகவும் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இப்படம் 62வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதினைப் பெற்றது. இந்த விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தேசிய திரைப்பட விழாவில் சிறந்த பொழுதுபோக்கு விருது ‘மேரி கோம்’ படத்திற்கு கிடைத்தது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தேன். அதற்கு பலனாக இந்த விருது கிடைத்திருக்கிறது. வீராங்கனை மேரி கோம் என் இதயத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த மேரி கோமுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online