நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தேக்கு சுவேதாபாசு ஆதரவு

c5cb9931-15ce-4e31-a8ae-63f269338dcc_S_secvpfதமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள சுவேதாபாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைதாகி பரபரப்பு ஏற்படுத்தினார்.

பெண்கள் காப்பகத்தில் போலீசார் அவரை வைத்தனர். பிறகு கோர்ட்டு விடுவித்தது. தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹாலிவுட் குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சுவேதா பாசு ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்த நிர்வாண படம் இணைய தளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி உள்ளது.

படம் ரிலீசாகும் முன் யாரோ திருட்டுத்தனமாக இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்வாண வீடியோவை வாட்ஸ்-அப், இணைய தளங்களில் வெளியிட்டவரை கண்டுபிடித்து தண்டிக்கும் படி படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராதிகா ஆப்தே கூறும்போது, அந்த படத்தில் நிர்வாணமாக நடித்தது தவறல்ல. நிர்வாண வீடியோ வெளியானது பற்றியும் நான் கவலைப்படவில்லை என்றார்.

ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாக சுவேதாபாசு கூறும்போது,

ராதிகா ஆப்தே நடித்த குறிப்பிட்ட காட்சியை விஷமிகள் இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர். அனுராக் காஷ்யப் சிறந்த இயக்குனர். அவருக்கு மகள் இருக்கிறார். எனவே இந்த காட்சியை தவறாக எடுத்து இருக்கமாட்டார். எச்சரிக்கையாகவே எடுத்து இருப்பார்.

இந்த காட்சி படமாக்கப்பட்ட போது இரண்டு பெண்கள் மட்டுமே அரங்கில் இருந்துள்ளனர். அத்துடன் இந்த படம் இந்தியாவில் திரையிடப்படாது என்றும் வெளிநாடுகளில் தான் ரிலீசாகும் என்றும் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஷமிகள் இதை வெளியிட்டு விட்டனர்.

ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்தது தவறல்ல என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries