தாய்லாந்தில் புலி

b3790968-dcbc-4475-bc86-760372a1465d_S_secvpfவிஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, சுருதிஹாசன் நடித்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதிப், பிரபு, நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னை ஈசிஆரில் பிரம்மாண்டமான செட் அமைத்து தொடங்கப்பட்டது. பின்னர் கேரளாவிலும் சமீபத்தில் ஆந்திரா தலக்கோணம் பகுதியிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அடுத்தகட்டமாக தாய்லாந்து சென்றுள்ள புலி படக்குழுவினர், அங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3 வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை பி.டி.செல்வகுமார், ஷிபுவுன் தமீன்ஸ் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries