காக்கா முட்டை பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு

1430896668-1582தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை சர்வதேச விருதுகளுடன் 2014 -ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது.

படத்தில் நடித்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.
காக்கா முட்டை விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், நானும் எனது அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கைதான் காக்கா முட்டை. எங்களது லைப் ஸ்டைல், வசித்த இடம், வாழ்ந்த உணர்வுகளை இந்தப் படம் தந்தது. நான் வறுமை, இன்ப வாழ்க்கை இரண்டையும் அனுபவித்துள்ளேன் என்றார்.

மேலும், படத்தில் நடித்த இரு சிறுவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாகவும், அவர்கள் நடிக்க விருப்பப்பட்டால் அதற்கும் உதவுவதாகவும் தனுஷ் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries