வாட்ஸ்–அப்பில் பரவும் ஆபாச படங்கள்: போலீசில் புகார் செய்ய கதாநாயகிகள் தயக்கம்

7e49761f-1358-47ce-b174-12f5b6cbd774_S_secvpfகதாநாயகிகளின் ஆபாச படங்களை இணையதளங்களிலும் வாட்ஸ் – அப்களிலும் வெளியிடும் கலாச்சாரம் பரவி வருகிறது. இதனால் அனைத்து நடிகைகளும் கலக்கத்தில் உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் இருந்த போது இப்படங்களை வீடியோவில் பதிவு செய்துள்ளதால் ஓட்டல்களில் தங்கவும் அச்சப்படுகின்றனர்.

ஹன்சிகா ஓட்டல் பாத்ரூமில் குளிப்பது போன்ற படம் வாட்ஸ் – அப்களில் பரவியது. கேமராவை மறைத்து வைத்து இப்படத்தை எடுத்து இருந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீள்வதற்கு முன்பே தொடர்ச்சியாக ஹன்சிகாவின் இரண்டாவது பாத்ரூம் குளியல் படமும் வந்தது.

இது போல் அனுஷ்கா பெயரில் ஆபாச படமொன்றும் வெளியானது. இது தமிழ், தெலுங்கு பட உலகினரை மேலும் அதிர வைத்தது.

இதுபோல் லட்சுமி மேனனின் படுக்கையறை வீடியோ பெயரிலும் ஆபாச படங்கள் வலம் வந்தன. ராதிகா ஆப்தே, வசுந்தரா போன்றோரின் ஆபாச படங்களும் வந்தன.

தற்போது நித்யாமேனன் ஆபாச படமும் வெளிவந்துள்ளது. நிர்வாண பெண் உடலுடன் நித்யாமேனன் தலையை ஒட்டி மார்பிங் செய்து இந்த படத்தை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுபவர்கள் யார் என்று தெரியவில்லை. இது குறித்து புகார் அளித்தால் விஷமிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் எந்த நடிகையும் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை. ஒரு முன்னணி நடிகை மட்டும் துணிச்சலாக புகார் அளிக்க மனுவை தயார் செய்தாராம். ஆனால் விசாரணை என்று அலைந்து பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என சக நடிகைகள் அறிவுறுத்தியதால் அமைதியாகி விட்டார் என்கின்றனர்.

இது போன்ற படங்களை வெளியிடப்படுவதை எந்த வகையில் தடுக்கலாம் என்று நடிகர்கள் ஆலோசிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries