சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை: மௌனம் சாதிக்கும் ஷாரூக் மற்றும் அமீர் கான்

4aa8d053-7e0b-45bc-8dff-c2cb43392d1b_S_secvpfஇந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சல்மான் கானுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக நடிகை சோனாக்‌ஷி சின்கா, பிரீத்தி ஜிந்தா, பிபாஷா பாசு, நடிகர்கள் சதிஷ் கவுசிக், ரிஷி கபூர், அர்ஜுன் கபூர், கரண் ஜோஹர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சல்மான் கானுக்கு ஆதரவாக டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த பாலிவுட் நட்சத்திர பட்டாளம் மற்றும் சல்மான்கான் ஆதரவாளர்களை இந்த தீர்ப்பு பெரிதும் கவலைப்பட வைத்துள்ளது.

எனினும் சல்மான்கானின் மிக நெருங்கிய நண்பர்களான பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் ஆகிய இருவரும் இதுவரை நீதிமன்ற தீர்ப்பு பற்றி எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் இருப்பது பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries