அஜித் படம் மூலம் என் கனவு நனவானது: லட்சுமி மேனன்

898d8e64-8be6-4273-855e-8a34d4298aa1_S_secvpf‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பின்னி மில்லில் ஆரம்பமாகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு தங்கை வேடத்திற்கு பல ஹீரோயின்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கடைசியாக லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அதை தற்போது லட்சுமி மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அஜித் படத்தில் நடிக்க இருப்பது குறித்து லட்சுமி மேனன் சமூக வலைதளத்தில் கூறும்போது, நான் இத்தகவலை தெரிவிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதே அனைத்து ஹீரோயின்களின் விருப்பம். அந்த கனவு தற்போது அஜித்துடன் நடிப்பது மூலம் எனக்கு நனவாகியுள்ளது. அஜித்துடன் இணைந்து இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றார்.

லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான கொம்பன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries