பாடகர் கிரிஷ் நாயகனாக அறிமுகமாகும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

bab87bdf-f658-4985-8383-58f010482069_S_secvpfகமல் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம் பெற்ற ‘மஞ்சள் வெயில்…’ என்னும் பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கிரிஷ்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு பாட்டு பாடி வந்த கிரிஷ், தற்போது கதாநாயகனாக ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக சிருஸ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹைனா சேகர் இசையமைக்கிறார். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தம்பி செய்யது இப்ராஹீம் இயக்குகிறார். இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியாதவது, இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களை சொல்ல தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.

இந்த படத்திற்காக காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டது. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்.

படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries