இவங்க பாசத்துக்கு ஒரு அளவில்லையா…?

1431099353-2959பிரபுசாலமனின் மைனா அவருக்கும், அமலா பாலுக்கும் மட்டும் அடையாளத்தை தரவில்லை. டிஇமானுக்கும் அப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, பிரபுசாலமன் படம் இயக்குவதாக இருந்தால், முதல் கால்ஷீட் பெறப்படுவது டி.இமானிடம்தான்.

விரைவில் பிரபுசாலமன் இயக்கவுள்ள புதிய படத்துக்கும் இமான்தான் இசை. நாயகன் தனுஷ். இப்போதைக்கு இந்த இரு விஷயங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்களை நல்ல நாளில் தொடங்க வேண்டும் என்று காத்திருந்த இமான், நேற்று பாடல் கம்போஸிங்கை தொடங்கினார். நேற்று – வியாழக்கிழமை பிரபுசாலமனின் பிறந்தநாள். அவர் படத்தின் கம்போஸிங்கை தொடங்க இதைவிட நல்ல நாள் அமையுமா என்ன.

நேற்று கம்போஸ் செய்த பாடலை பிரபுசாலமனுக்கு சமர்ப்பணம் செய்யவிருப்பதாக இமான் கூறினார்.

புல்லரிக்குதுங்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online