லட்சுமி மேனனை பெயிலாக்கிய மீடியா

1431098745-6816லட்சுமி மேனன் சமீபத்தில் நடந்த பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார். அவர் எழுதியது கொச்சியிலுள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில்.

இந்த விவரம் தெரியாத சிலர், நேற்று தமிழ்நாட்டில் பிளஸ் டூ முடிவுகள் வெளியானதும், லட்சுமி மேனன் தேர்வில் தோல்வி அடைந்ததாக வதந்தி பரப்பினர்.

இந்த வதந்தியை வதந்தி என்று தெரியாமல் பல மீடியாக்கள் செய்தியாக வெளியிட்டன. அதனை லட்சுமி மேனன் மறுத்துள்ளார்.

“நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இ.யில் படித்தேன். சி.பி.எஸ்.இ.யில் தான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினேன். அந்தத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20 ஆம் தேதிக்கு மேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

நான் 12 ஆம் வகுப்பு தேர்வில் பெயில் ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries