காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு நடிகர் தனுஷ் உதவி

515f6475-aaa7-4239-8f30-4c17b5be70ad_S_secvpfதனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் படம் ‘காக்கா முட்டை’. இப்படத்தை மணிகண்டன் இயக்குகிறார்.

இந்த படம் ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ளது. தற்போது 2014–ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

இந்த விருதை தனுஷ் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார். இப்படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது கிடைத்தது. இதன் பாடல்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த படம் குறித்து தனுஷ் கூறும்போது, ‘‘ நானும் எனது அண்ணனும் சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கைதான் ‘காக்கா முட்டை’. நான் வறுமை, சந்தோஷம் இரண்டையும் எப்போது அனுபவித்தேன்.

இந்த படத்தில் நடித்த சிறுவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் நடிக்க விரும்பினால் அதற்கும் உதவுவேன்‘‘ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online