நடிகனாக நான் வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ராஜேஷும், சந்தானமும் தான் காரணம்: உதயநிதி ஸ்டாலின்

0593fce0-2940-47ec-98de-e7ba21126c8b_S_secvpfநகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், நான் நடிகனாக வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ராஜேஷும், நடிகர் சந்தானமும் தான் காரணம் என்று கூறினார்.

அதே போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்தின் நடனம் தன்னை மிகவும் ஈர்த்ததாக கூறிய உதயநிதி, இப்படத்திற்கு பின்னர் தானும் நடனத்தின் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

இவ்விழாவில் நடிகர் ஆர்யா, வி.டி.வி. கணேஷ், நடிகர் சிலம்பரசன், தம்பி ராமையா, பாடகர் கானா பாலா ஆகியோரும் பங்கேற்று பேசினர். நடிகர் சந்தானத்தின் தந்தையும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online