பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: நேரில் வழங்கினார் அருண் ஜெட்லி

5c59ab51-8c94-45e5-ac6c-67f01a4824bc_S_secvpfபாலிவுட் நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான சசி கபூருக்கு இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உடல்நிலைக்குறைவு காரணமாக சசி கபூர் பங்கேற்க இயலவில்லை. இதையடுத்து மும்பைக்கு சென்று இவ்விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.

அதன் படி இன்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சசி கபூரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி, சசி கபூரிடம் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார்.

1938 ஆம் ஆண்டு பிறந்தவரான சசி கபூர், குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் திரையின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online