காசு இல்லை, காதலி இல்லை – கவலைசூழ் உலகில் சிம்பு

1431348927-1619லைம் லைட்டில் இருக்கும் நடிகர்கள் உலகின் அத்தனை சுகபோகங்களையும் அனுபவிப்பதாக பாமர ரசிகர்களுக்கு எண்ணமிருக்கிறது.

ணத்துக்குப் பணம் சுகத்துக்கு சுகம். நினைத்ததை அடைவதற்கான பணமும், பிரபல்யமும் அவர்களுக்கு இருப்பதாக நாம் நினைப்பது சரிதானா? இனிமே இப்படிதான் படத்தின் பாடல்கள் வெளியீட்டில், பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும் தொனியில் சிம்பு சொன்னவையை தொகுத்தால் நமது நினைப்பு எவ்வளவு அபத்தமானது என்று தெரியவரும். அந்தளவுக்கு சோகமயம் சிம்புவின் வாழ்க்கை.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டுக்குப் பிறகு எந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. 2 வருடம் கழித்து இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன் என்று பேச்சை ஆரம்பித்தார் சிம்பு.

ஒற்றுமை

இனிமே இப்படித்தான் படத்தை இயக்கி இருக்கும் முருகன் மற்றும் ஆனந்த் என இருவருமே முருகானந்த் என ஒற்றுமையாக பேர் போட்டிருக்கிறார்கள். அதுவே இந்தப் படத்துக்கு வெற்றிதான் என நினைக்கிறேன். இந்த ஒற்றுமைக்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாகும் என நினைக்கிறேன்.

மன்மதனில் சந்தானம்

மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். இப்போது இவ்வளவு பெரிய உயரத்துக்கு போய் இருக்கிறார். சந்தானத்தை நீங்க தானே அறிமுகப்படுத்தினீங்க.

இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டார் என என்னிடமே நிறைய பேர் கேட்டார்கள். அறிமுகப்படுத்தினேன் என்பதை விட அவரிடம் திறமை இருக்கிறது என்பதை முதலில் அங்கீகரித்தேன் எனலாம். அவர் பெரிய நடிகனாக வருவார் என்று அங்கீகரித்துதான் பல தடைகளைத் தாண்டி அவரை மன்மதன் படத்தில் நடிக்க வைத்தேன்.

எனக்கு திறமையே கிடையாது

நான் சந்தானத்தின் திறமையை தான் அங்கீகரித்தேன். ஆனால், எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கிக் கொடுத்ததே எங்க அப்பா தான். இங்கு நான் நிற்பதற்கு காரணம் எங்க அப்பா தான். தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுப்பதற்கு சில பேர் தான் இருக்கிறார்கள். சந்தானத்தின் திறமையை அங்கீகரித்தேன் என்ற விஷயத்தில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online