குடும்ப குத்துவிளக்காக மாறிய சமந்தா

ef82ce23-48e1-4d49-9baf-7a236241502c_S_secvpfதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் லேசான கவர்ச்சியில் வலம் வந்த சமந்தா, சூர்யாவுடன் நடித்த ‘அஞ்சான்’ படத்தில் பிகினி உடையில் நடித்து, அதிர்ச்சி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து வந்த படங்களிலும் அதிரடி கவர்ச்சி காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய திடீர் கவர்ச்சி பிரவேசம் தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவருக்கும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இந்நிலையில், சமந்தா தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில்’ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கவர்ச்சியெல்லாம் ஒத்திவைத்துவிட்டு ஒரு குடும்பப் பெண்ணாக சமந்தா நடிக்கிறாராம்.

ஒரு குடும்ப பெண்மணி எந்தமாதிரி இருப்பாரோ, அதுபோல், சேலை, மூக்குத்தி, நெற்றியில் பெரிய பொட்டு என இதில் தோன்றவிருக்கிறாராம். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வேல்ராஜ் இயக்குகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online