மீண்டும் நடிக்கும் குட்டி ராதிகா

1431336640-1094இயற்கை படத்தில் எஸ்.பி.ஜனநாதனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் குட்டி ராதிகா. தொடர்ந்து மீசை மாதவன் உள்பட சில படங்களில் நடித்தார்.
குட்டி ராதிகாவின் பூர்வீகம் கர்நாடகா.

முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் குட்டி ராதிகாவுக்கும் தொடர்பு இருந்தது. 2006 -இல் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இவர்களின் திருமணம் முடிந்து அதிக நாள் கழிந்த பிறகே வெளியுலகத்துக்கு இவர்களின் உறவு தெரிய வந்தது.

திருமணத்துக்குப் பின் குட்டி ராதிகா படங்களில் நடிப்பதை தவிர்த்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மீண்டும் நடிப்பு ஆசை அவரிடம் துளிர்விட்டிருக்கிறது.

ரகுராம் இயக்கும் நடனத்தை மையமாக வைத்து தயாராகும் படத்தில் குட்டி ராதிகா நடிக்கிறார். படத்துக்கு, ஐ ஹேட் டான்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குட்டி ராதிகாவின் இந்த முடிவுக்கு குமாரசாமி சம்மதம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries