மாஸ் – சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை

1401860247_surya-and-venkat-prabhuகதையே இல்லாமல் படமெடுக்கிறவன் நான் என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர் வெங்கட்பிரபு. அவரது படப்பிடிப்பு தளம் விடுமுறை விளையாட்டுக்களம் போல இருக்கும் என, அவரது படங்களில் நடித்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சூரியன் உச்சிக்கு வருகையில் ஸ்பாட்டுக்கு வந்து, டென்ஷன் இல்லாமல் காட்சிகளை ஷுட் செய்வது வெங்கியின் ஸ்டைல். சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரது கதாபாத்தரத்தை நன்றாக ஸ்டடி செய்து, ஹோம்வொர்க் செய்து அதன் பிறகே படப்பிடிப்புக்கு வருவார்.

இந்த இருவேறு காம்பினேஷன் மாஸில் ஒன்றிணைந்திருக்கிறது. சூர்யா மாஸ் படத்துக்காக ஹோம்வொர்க் செய்தாரா? வெங்கட்பிரபுவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரஸியம்.

மாஸில் சூர்யா நடிப்பது உறுதியானதும், இந்தப் படத்துக்காக எந்த ஹோம்வொர்க்கும் செய்ய வேண்டாம், சும்மா ஸ்பாட்டுக்கு வந்து நடித்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம் படத்தில் சூர்யாவுக்கு தனித்துவமான ஒரு கதாபாத்திரம் உள்ளது. அதில் அவரது பாடிலாங்குவேஜ், மேனரிசங்கள் அனைத்தும் புதியவை, வித்தியாசமானவை. அந்த கதாபாத்திரத்துக்கு மட்டும் சூர்யா ஹோம்வொர்க் செய்துள்ளார்.

மே 29 படம் திரைக்கு வருகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries