2 வருஷத்துல எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டேன்: சிம்பு சோகம்

a6cf6ed1-73b0-4f1b-98b4-7c6b5b978b9d_S_secvpfவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை அடுத்து சந்தானம் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, ஆர்யா, உதயநிதி, கெளதம் மேனன், ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிம்பு பேசும்போது, கடந்த இரண்டு வருசமா நான் நடிச்ச படம் எதுவுமே ரிலீஸ் ஆகல. அதனால எந்த விழாவிலும் நான் கலந்துக்கல. கடைசியாக நான் கலந்துக்கிட்ட விழா சந்தானம் நடிச்ச ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தோடு ஆடியோ விழாதான். அப்புறம் இப்போதான் விழாவிலேயே கலந்துக்கிறேன்.

சந்தானத்தை ‘மன்மதன்’ படத்துல நான்தான் அறிமுகம் செய்தேன். அப்ப நிறைய பேர் சந்தானம் வேண்டான்னு சொன்னாங்க. ஆனா இந்த பையங்கிட்ட நல்ல திறமை இருக்கு நல்லா வருவான்னு எல்லார் கிட்டயும் சொல்லிதான் சந்தானத்தை நடிக்க வைச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறார். சந்தோசமா இருக்கு.

என்னோட டேலண்ட்டை உருவாக்கினது என் அப்பாதான். இந்த உலகத்துல தட்டிவிட நிறையபேர் இருக்காங்க, ஆனா தட்டிக்கொடுக்கத்தா ஆளில்ல. இரண்டு வருசமா என் படம் எதுவுமே ரிலீஸ் ஆகாததால் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதா கடவுளத் தேடிப்போனேன்.

சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டம்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்தேன். ஆனா இந்த இரண்டு வருசத்துல ஒரு சாதாரண மனுஷனா இருந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன். நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன். ஆனா இப்ப என்னால அவங்களுக்கு பணம் கொடுக்க முடியல. அவங்ககிட்ட செலவுக்கு பணம் கேக்கவே கஷ்டமா இருக்கு.

இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது. ஆனா அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுட்டு போயிட்டா. ஏற்கனவே எனக்குள்ள இருந்த கஷ்டத்தோட சேர்த்து, காதலி விட்டுட்டு போன கஷ்டமும் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது. கடவுள் கஷ்டத்த கொடுத்து என்னை டெஸ்ட் பண்றார்னு நினைச்சிக்கிட்டேன். எல்லாமே போயி எங்கிட்ட வெறும் உயிர் மட்டும்தான் இருந்தது.

அப்பதான் கெளதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிட்டு இருந்த போது, அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது. அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப கஷ்டப்பட்டார். கவுதம் மேனன் இருந்த சூழ்நிலையில், அஜித் படம் இயக்குறதையே பெருசா நினச்சாரு. நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித் கூட என் அப்பாகிட்ட ”உங்க பையன் நல்லா வருவான் பீல் பண்ணாதீங்கன்னு சொன்னார்.

அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பதான் நமக்காக வாழ்றத விட மத்தவங்களுக்காக வாழ்றதுன்னு முடிவெடுத்தேன். என் ரசிகர்கள் என்ன இன்னும் நெனச்சுட்டு இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த இரண்டு வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய எழுதினாங்க. ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால, அவங்க எனக்கு சப்போர்ட் பன்னாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா நா காணாம போயிருப்பேன்”.

இவ்வாறு உருக்கமாக சிம்பு பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online