தூங்காவனமாக மாறிய கமலின் ஒரே இரவு?

0510873e-d174-4146-85eb-466bacd99bd7_S_secvpfகமல் நடிப்பில் தற்போது ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2-’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது. இதைத் தொடர்ந்து கமல் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இவர் நடிக்கும் அடுத்த படத்தை இவருடன் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கவிருக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், மனிஷா கொய்ராலாவும், பிரகாஷ் ராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு ‘ஒரே இரவு’ என்று தலைப்பிட்டுள்ளதாக செய்தி வெளிவந்தது.

இந்த நிலையில்தான் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சமீத்தில் பிலிம் சேம்பரில் ‘தூங்காவனம்’ என்னும் தலைப்பை பதிவு செய்துள்ளது. ‘ஒரே இரவு’ என்று படத்தின் தலைப்பைத்தான் ‘தூங்காவனம்’ என தலைப்பு மாற்றி பதிவு செய்துள்ளாக கூறப்படுகிறது. எனினும், விரைவில் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். சென்னையில் ஒரே இரவில் நடக்கும் ஒரு க்ரைம் ஸ்டோரி கதை என்பதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries