பேய் படத்தில் நடிப்பது ஏன்?: சூர்யா பேட்டி

ccb67d09-e767-4539-812b-d43d5f18e88f_S_secvpfசூர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருக்கிறார். பேய் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது. வருகிற மே 29-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

பேய் படத்தில் நடிப்பது குறித்து சூர்யா அளித்த பேட்டி வருமாறு:–

நிறைய பேய் படங்கள் வந்துள்ளன. அவற்றில் சொல்லப்படாத ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படியே படம் வந்து இருக்கிறது.

கொஞ்சம் பயமுறுத்தும்படி படம் இருக்கும். ஆனால் முழு பயமுறுத்தல் படமாக இருக்காது. பொழுதுபோக்கான விஷயங்கள் நிறைய இருக்கும். வெங்கட்பிரபு புது ஐடியாவை இதில் விதைத்து இருக்கிறார். யுவன்சங்கர் ராஜா அதற்கு அழகு சேர்த்து இருக்கிறார். இதில் நான் இரு பரிமாணங்களில் வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online