சிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத்

6d8578f6-e440-40ba-94bc-c3cfa5a51ac3_S_secvpfசிம்புவின் தம்பி குறளரசன் ‘இது நம்ம ஆளு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சிம்பு நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

மேலும் ஆண்ட்ரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இப்படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல் காட்சிகளை மட்டும் படமாக்கப்படவுள்ளது. குறளரசன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் கேட்டிருக்கிறார்.

இது குறித்து அனிருத் கூறும்போது, ‘இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசனை வாழ்த்துகிறேன். இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை கேட்டேன்.

பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் பாடல்களை பற்றி தவறான வதந்திகள் வந்தால் நம்பாதீர்கள்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online