சூர்யா படத்தில் ஸ்ருதிஹாசன்

b3850b7e-d55f-43f8-8b38-e4d7c6d3f7e1_S_secvpfசூர்யாவின் சினிமா பயணத்தில் சிங்கம் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சூர்யாவை வைத்து ஹரி இயக்கியிருந்தார். சிங்கம்-2 என்ற பெயரில் வெளிவந்த இப்படம் சிங்கம் படத்தைவிட பெரிய வெற்றி பெற்றது.

இரண்டு வெற்றிகளை பெற்றுவிட்ட சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார். இந்த படத்திலும் சூர்யா-அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கம் 2-ம் பாகத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல், இந்த மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூரியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் ஏற்கெனவே சூர்யாவுடன் 7-ஆம் அறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல், ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பூஜை’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்போது ‘24’ என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வரும் செப்டம்பர் மாதத்தில் ‘சிங்கம்-3’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries