சன்னி லியோன் மீது வழக்கு பதிவு

62b9342f-d716-4d31-bef4-92cedb37b559_S_secvpfஆபாச சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் சன்னி லியோன். இவரது கவர்ச்சியான நடிப்பில் உருவான ‘ஏக் பாலி லீலா’ சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் இடம் பெற்ற ஆபாச காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவியது. மேலும் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை இவரே இணையதளத்தில் பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

தற்போது இவர் மீது சமூக ஆர்வலர் ஒரு மும்பை டோம்பிவிலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘சமூக வலைத்தளம் மற்றும் இணையதளத்தில் சன்னி லியோனின் ஆபாச புகைப்படங்கள், செய்திகள் அதிகமாக உள்ளது.

இது ஆபாசத்தை ஊக்குவிப்பது மற்றும் இந்திய சமூகத்தை பாதிக்கும் செயல். மக்களின் மனதை சிதைக்கும். குறிப்பாக சிறார்கள் மனதை கெடுக்கும். ஆதலால் சன்னி லியோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேல் விசாரணைக்காக சைபர் குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online