தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ ‘அரண்மனை’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது இவர் கைவசம் ‘சவுகார்பேட்டை’ மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம்’ ஆகிய படங்கள் உள்ளன. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இவர், தினமும் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் ஏதாவது ஒரு செய்தி வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் படப்பிடிப்பில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் அந்த வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் காரில் அமர்ந்திருந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நான் 26-வயதில் எலிசபெத் ராணியை பார்த்ததில்லை. இப்போது நான் பார்க்கிறேன்.
தலையில் கிரீடம் மட்டும்தான் இல்லை என்று கூறியுள்ளார். இந்த கருத்தை படித்த லட்சுமிராய், அதை ரீடுவிட் செய்துள்ளார். தன்னை எலிசபெத் ராணி அளவுக்கு நேசித்த அந்த ரசிகர் மீது ராய் லட்சுமிக்கு தனி பாசம் எழுந்துள்ளது.