ஆர்யா படத்தில் நாகார்ஜூனா சிறப்பு தோற்றம்

bc885006-3594-4e20-829e-de17312bc91c_S_secvpf‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகிறது. இப்படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு ரசிகர்களை கவரவே நாகார்ஜூனாவை நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online