ஏமாந்த நடிகை

1431768596-7177’அட்டகத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவரிடம் ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார் மேனேஜர் ஒருவர்.

அவரின் ஆலோசனைப்படிதான் படங்களை ஒப்புக்கொள்வார். அவர் சொன்னால் சரியாக இருக்குமென்று படங்கள் முதல் பணம் வரை மிகவும் நம்பினார் நந்திதா.

நிறைய படங்கள், எதிர்பார்த்த சம்பளம் கிடைத்தும் அவையாவும் நந்திதா வங்கிக் கணக்குக்கு செல்லாமல், மேனேஜர் தனது கணக்கில் வரவு வைத்து வந்த விசயம் சமீபத்தில்தான் தெரியவந்திருக்கிறது. உடனே அவரை நீக்கியதோடு, அவர் தன்னிடமிருந்து ஏமாற்றிய பல லட்சங்களையும் சட்ட ரீதியாக பெறவும் முயற்சித்து வருகிறார்.

சம்பாதிப்பதை விட, அதை பாதுகாப்பதும் மிக முக்கியம் என்பது நந்திதா விசயத்தில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அழகான பொண்ணுங்களை அழ வைக்காதிங்கப்பா…

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online