இணையதளத்தில் ஆபாச படங்கள்: நடிகை சன்னி லியோன் மீது வழக்கு பதிவு

1431746481-4611இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டதாக இந்தி நடிகை சன்னி லியோன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த பெண் அஞ்சலி பாலன். இவருக்கு வயது 30. இல்லத்தரசியான இவர், டோம்பிவிலி காவல் நிலையத்தில் இந்தி நடிகை சன்னி லியோன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “நான் இணையதளத்தை பயன்படுத்திபோது, அதில் நடிகை சன்னி லியோனின் பல ஆபாச படங்களை பார்த்தேன். தவிர, அவருடைய வலைதளத்திலும் ஆட்சேபனைக்கு உரிய படங்கள் இடம் பெற்றுள்ளது.

இதுபோன்ற பதிவுகள், குழந்தைகள் மட்டுமின்றி அனைவரது மனதிலும் நஞ்சை கலப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை ஏற்று கொண்ட காவல்துறையினர், நடிகை சன்னி லியோன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு தானே சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

34 வயதான நடிகை சன்னி லியோன், சமீபத்தில் தன்னுடைய நடிப்பில் வெளியான “ஏக் பஹேலி லீலா” படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக தானேக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் தமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online