ஒரு நாள் முன்னதாகவே பிறந்த நாள் கொண்டாடிய சார்மி

391f931d-a76b-422b-87df-3c2d484e7b30_S_secvpf‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சார்மி. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் சார்மியின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ‘ஆஹா இத்தனை அழகு’, ‘காதல் கிசுகிசு’, ‘லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘மந்த்ரா 2’ படத்திலும், ‘ஜோதி லட்சுமி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இவருடைய பிறந்தநாள் மே 17ம் தேதி. நாளை சார்மி நடித்து வரும் ‘ஜோதி லட்சுமி’ படத்தின் அறிமுக விழா நடைபெற இருப்பதால், தன்னுடைய பிறந்த நாளை இன்றே தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

தன் குடும்பத்தாருடன் ஒரு ஓட்டலில் கேக் வெட்டி உணவு சாப்பிட்டு மகிழ்ந்ததை புகைப்படங்கள் எடுத்து தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries